ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் , தவிர்க்க வேண்டியவையும்

ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் , தவிர்க்க வேண்டியவையும் ...!!!



ஒருவர் பிறக்கும் பொழுது உடல், மனோ காரகன் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரம், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜென்ம ராசி ஆகும்.

ராசி மண்டலத்தில் 12 ராசிகளில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் , இவற்றில் 3 நட்சத்திர ங்களுக்கு ஒரு கிரகம் என்ற கணக்கில் 9 கிரகங்கள் அதிபதியாக உள்ளன.

நட்சத்திரங்கள் – அதிபதி
அஸ்வினி மகம் மூலம் – கேது
பரணி பூரம் பூராடம் – சுக்கிரன்
கார்த்திகை உத்திரம் உத்திராடம் – சூரியன்
ரோகினி ஹஸ்தம் திருவோணம் – சந்திரன்
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் – செவ்வாய்
திருவாதிரை சுவாதி சதயம் – ராகு
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி – குரு
பூசம் அனுஷம் உத்திரட்டாதி – சனி
ஆயில்யம் கேட்டை ரேவதி – புதன்

உதா
ஒருவர் பூர நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அது ஜென்ம நட்சத்திரமாகும் . பூராடம், பரணி அவரின் அனுஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும் கூடாதவைகள் என்பவைகளை தவிர்த்தல் வேண்டும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் செய்ய தக்கவை என்றும், கூடாதவை, ஆகாதவை என செயல்களில் சிலவற்றை நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர், இங்கு கூடாதவை, ஆகாதவை என்று கூறுவது அவர்களின் அனுபவத்தை கொண்டு தான், அவற்றை தவிர்க்கலாம், அவற்றை செய்வதால் எதிர்மறையான அல்லது திருப்தியற்ற பலன்களே ஏற்படலாம்.

ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை
குலதெய்வ, இஸ்ட தெய்வ வழிபாடு , புத்தாடை அணிதல், அன்னதானம், தான தர்மங்கள் செய்தல், நிலம், சொத்துகள் வாங்குதல்,
பதவியேற்பது போன்றவற்றை செய்யலாம்.

ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை
திருமணம், சீமந்தம், முடி இறக்குதல், காது குத்து, எண்ணெய் ஸ்நானம் ( எண்ணெய் குளியல்), தாம்பத்தியம், மருந்து உண்ணுதல், அறுவை சிகிச்சை போன்ற உடல் தொடர்பான விசயங்களை தவிர்த்தல் நலம்.